கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் | பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா | 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு | தமிழில் வெளியாகும் சாரா அர்ஜுனின் தெலுங்கு படம் | நான்காவது முறையாக தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி | வெங்கடேஷ் என்னுடைய நவீன கால குரு : சிரஞ்சீவி புகழாரம் | இயக்குனர் கீத்து மோகன்தஸுக்கு 8 வருடம் காத்திருந்து மம்முட்டி பட இயக்குனர் பதிலடி | அமரன் தாய்நாட்டுக்காக... பராசக்தி தாய்மொழிக்காக... : சிவகார்த்திகேயன் | எல்லா முயற்சியும் செய்தோம்... : மன்னிப்பு கேட்ட ‛ஜனநாயகன' தயாரிப்பாளர் |

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டன்கி'. ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்தனர். ஆனால், சமீபத்தில் இத்திரைப்படம் தள்ளிப்போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் ஜவான் பட சக்சஸ் விழாவில் டன்கி திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி உறுதியாக வெளியாகும். இதில் என்ற மாற்றமும் இல்லை என உறுதிபடுத்தினார் ஷாரூக்கான். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் ஒரே வருடத்தில் ஷாரூக்கான் நடித்த மூன்று படங்கள் வெளியாகிறது என பகிர்ந்து வருகின்றனர்.