'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
தமிழ் சினிமாவில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலராக வலம் வருபவர் நடிகர் விஷால். கடந்த பல வருடங்களில் இவருடன் இணைந்து நடித்த சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினாலும் அவற்றையெல்லாம் தொடர்ந்து மறுத்து வருகிறார் விஷால். அவரது திருமணம் பற்றி கேட்கப்படும் போதெல்லாம் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்த பின் அதில் தான் தனது திருமணம் நடைபெறும் என்று கூறி வருகிறார். இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சில காரணங்களால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று போனது.
அந்த பெண்ணும் வேறு ஒருவரை திருமணம் செய்துவிட்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது, “சல்மான் கான் திருமணம் செய்யட்டும். அதன்பிறகு நான் திருமணம் செய்கிறேன்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் விஷால். அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாகியுள்ள நிலையில் அங்கே புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேட்டியளித்துள்ளார் விஷால்.
அதில் அவரது திருமணம் பற்றி கேட்கப்பட்டபோது, “இதற்கு முன்னதாக என் நண்பன் ஆர்யா திருமணம் செய்யட்டும். பிறகு நான் செய்கிறேன் என்று கூறினேன். அவர் திருமணம் செய்தபிறகு மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார்கள். பிரபாஸ் திருமணம் செய்யட்டும் என்று கூட சொல்லலாம். ஆனால் சல்மான் கான் திருமணம் செய்யட்டும் அதன் பிறகு நான் செய்கிறேன் என்று சொல்வது தான் இப்போது சரியாக இருக்கும்” என்று சமாளிப்பாக பதில் கூறியுள்ளார் விஷால்.
திருப்பதியில் சாமி தரிசனம்
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் விஷாலுக்கு ‛மார்க் ஆண்டனி' முக்கியமான படமாகும். இதனால் படம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி திருப்பதி கோயிலுக்கு சென்று அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த விஷால் நிருபர்களிடம் கூறும்போது, “நான் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் திரைக்கு வருகிறது. படத்தின் வெற்றிக்காக ஏழுமலையானை சரண் அடைந்து இருக்கிறேன். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக வங்கியில் கேட்டுள்ள கடன் விரைவில் கிடைத்துவிடும். எங்களின் பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்” என்றார்.