‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் தற்போது வெள்ளித்திரையில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் திடீரென மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரது உடல்நிலை குறித்து பலவிதமான வதந்திகள் பரவியது. அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யென ரோபோ சங்கரின் மகளும், மனைவியும் இன்னும் சில பிரபலங்களும் விளக்கமளித்து வந்தனர். ஆனாலும், அவரை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பினர். இந்நிலையில், தற்போது பூரண உடல்நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்பியுள்ள ரோபோ சங்கர் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்கிறார். அந்த வீடியோவில் ரோபோ சங்கரின் பிட்னஸை பார்க்கும் ரசிகர்கள் அவரை பெருமையாக புகழ்ந்து வருகின்றனர்.