பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சின்னத்திரையில் சூப்பர் வில்லி என பெயர் எடுத்த பரீனா ஆசாத், தொடர்ந்து சில தொடர்களில் நெகட்டிவ் ரோலில் கலக்கினார். கடைசியாக பாரதி கண்ணம்மா சீசன் 2வில் நடித்தார். அதன்பிறகு சீரியல் வாய்ப்புகள் சரிவர அமையாததால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டக்கர் டக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் மாடலிங்கில் பிசியாக போட்டோஷூட் நடத்தி வரும் பரீனா, தற்போது சந்திரமுகி 2 படத்தில் கங்கனா கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து 'சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவுக்கு பதில் ஃபரீனாவையே செலக்ட் பண்ணியிருக்கலாம்' என ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.