நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
தமிழில் பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். இவர் தற்போது இயக்கி உள்ள ஹிந்தி படம் 'தில் ஹெ கிரே'. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் வினித்குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுட்டேலா நடிதிருக்கிறார்கள். எம்.ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார்.
சோசியல் மீடியாக்களின் வளர்ச்சியால் தனிமனித சுதந்திரம் எப்படி பாதிக்கிறது. அந்தரங்கம் எப்படியெல்லாம் திருடப்படுகிறது என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது இந்த படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்திய அரசின் சார்பில் அனுப்பபட்டுள்ளது. இந்த திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுசி கணேசனும், ஊர்வசி ரவுட்டோலாவும் டொராண்டோ சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுசி கணேசன் கூறும்போது “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அதிலும், முதல் காட்சி டொராண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்படுவது, உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது” என்றார்.