காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான ஜவான் திரைப்படம் கடந்த ஏழாம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நான்கு நாட்களில் 500 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, அனிருத் என தமிழ் பிரபலங்கள் பலரை இந்திக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அட்லீ. அதேசமயம் ஏற்கனவே ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய பிரியாமணியும் இந்த படத்தில் ஷாரூக்கானின் ஆக்சன் டீமில் உள்ள பெண்களில் ஒருவராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஜிந்தா பந்தா என்கிற பாடல் பிரியாமணி உள்ளிட்ட சிறைக்கைதிகளுடன் ஷாருக்கான் ஆடிப்பாடும் விதமாக படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது முதலில் பிரியாமணி, ஷாரூக்கானின் பின்னால் நின்று ஆடிக் கொண்டிருந்தார். இதை கவனித்த ஷாரூக்கான், பிரியாமணியிடம் என் பின்னால் நின்று என்ன செய்கிறாய் என்று கேட்க, என்னை இங்கே தான் நின்று ஆடும்படி கூறியிருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார் பிரியாமணி.
இதைத் தொடர்ந்து அவரை இழுத்து தனது பக்கத்தில் நிற்க வைத்த ஷாரூக்கான், இந்த பாடல் முழுவதும் நீ இங்கே தான், என் அருகில் நின்று தான் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஷோபி மாஸ்டரை அழைத்து நீங்கள் என்ன விதமாக இந்த பாடலுக்கு நடனம் வடிவமைத்திருந்தாலும், நான் இப்போது செய்துள்ள மாற்றத்தால் இடைஞ்சல் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தவர். அவர் இந்த இடத்தில் இருந்து தான் ஆடுவார் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி