'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'சலார்'. இப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தேதியில் படம் வெளியாகாது என்று செய்திகள் வெளியாகின. இதுவரையிலும் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
'சலார்' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை அதிக விலைக்கு சொன்னதால் வினியோகஸ்தர்கள் பலரும வாங்கத் தயங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், ஓடிடி வெளியீட்டு உரிமை வியாபாரமும் முடிவடையாத காரணம், ஆகியவற்றாலும்தான் பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே, செப்டம்பர் 28ம் தேதிக்குப் பிறகு வேறு எந்த தேதியில் படத்தை வெளியிடுவது என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்து வருகிறதாம். பான் இந்தியா படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் படத்தை வெளியிட சரியான தேதியை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். நவம்பர் மாதம் வெளியிடலாமா அல்லது 2024 பொங்கலுக்கு வெளியிடலாமா என வினியோகஸ்தர்களுடனும் ஆலோசித்து அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.