நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் 'மார்க் ஆண்டனி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்த படத்தில் விஷால் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரிது வர்மா நடித்துள்ளனர். படம் வருகிற 15ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் படத் தயாரிப்புக்காக பைனான்சியர் அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இந்த பணத்தை விஷாலுக்கு பதிலாக லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையை லைகா நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத் தயாரிப்பு நிறுவனம் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிட முயற்சி செய்தது. இதையடுத்து தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் லைகா நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு முடியும் வரை இருப்பில் வைத்துக் கொள்ள, 15 கோடி ரூபாயை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு அந்த தொகையை செலுத்தாவிட்டால் வழக்கின் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் விஷால் செலுத்தாமல் இருப்பதாகவும், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வரும் 15ம் தேதி வெளியிட உள்ளதாகவும் லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதையடுத்து விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு வருகிற 12ம் தேதி நேரில் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஏற்கெனவே 15ம் தேதி வெளியாகவிருந்த 'சந்திரமுகி இரண்டாம் பாகம்' தள்ளிப்போன நிலையில் தற்போது மார்க் ஆண்டனி வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.