நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் | ரீல்ஸ் பைத்தியமாக நடிக்கும் வர்ஷினி வெங்கட் | பாலாஜி சக்திவேல் ஜோடியான வீடு அர்ச்சனா |
எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலர் சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர் பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர் டி.வி.நாராயணசாமி. அவரது நூற்றாண்டு விழாவை அவரது குடும்பத்தினர் கொண்டாடினார்கள். சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நேற்று மாலை இந்த விழா நடைபெற்றது. விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி, டி.வி.நாராயணசாமியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். டி.வி.நாராயணசாமியின் உருவப்படத்தை தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார்.
விழா மலரை இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திர சேகர் வெளியிட தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பெற்றுக் கொண்டார். விழாவில் வீட்டு வசதி வாரிய தலைவரும் நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன், தி.மு.க. மகளிரணி தலைவர் விஜயா தாயன்பன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.ராமகிருஷ்ணன், நல்லி குப்புசாமி, ஓவியர் மருது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.