கனடாவில் பிறந்து வளர்ந்த சன்னி லியோன். அங்கு பார்ன் ஸ்டாராக இருந்தவர் ஹிந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்து இங்கு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்தார். 'தீ இவன்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள். அங்கு விசா இன்றி வந்து செல்லலாம், தொழில் செய்யலாம். பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரைக்கும் ஏராளமான திரைப்பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். இந்த நிலையில் சன்னி லியோனுக்கும் வழங்கி உள்ளது.