லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை ஸ்வேதா மேனன் உருக்கமாக பாடியுள்ளார். அன்னை தந்தை ஆக்குவது யார், பிள்ளை என்றும் இல்லை என்றால், பெற்றோர் பிறப்பு மண்ணில் அன்று, வெண்ணிலவுக்கு வானில் மின்ன, பிள்ளை நிலவு கையில் உள்ள, அம்மா என்னும் பிஞ்சு மொழி கேட்க மனம் ஏங்கிடுதே என்ற அந்த பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது.