
மார்க் ஆண்டனி படத்தின் சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது
செப் 08, 2023
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா, அபிநயா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்துக்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வருகிற 15-ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும், இந்த படம் 150 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 30 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டது என்றும் படக்குழு அறிவித்திருக்கிறது. விஷாலும், எஸ்.ஜே .சூர்யாவும் மாறுபட்ட கெட்டப்புகளில் எதிரும் புதிருமாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!