அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
கடைசியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்த அனுஷ்கா சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் இன்று திரைக்கு வந்துள்ளது. இது அனுஷ்காவின் 48 வது படமாகும். இப்படத்தின் ப்ரோமோஷனில் அனுஷ்கா கலந்து கொண்டபோது, மீண்டும் பிரபாசுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ஒரு கேள்வி எழுந்தது. அதற்கு, எங்களது கூட்டணி ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அதனால் சரியான கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமையும் போது மீண்டும் பிரபாஸ் உடன் இணைந்து நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
41 வயது ஆகிவிட்டதே, எப்போது திருமணம் செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட அடுத்த கேள்விக்கு, இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. என்ன காரணமோ தெரியவில்லை நாட்கள் கடந்து கொண்டே வருகிறது. என்றாலும் நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக எனது திருமணம் நடைபெறும். அதற்காகத்தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஒரு பதில் கொடுத்திருக்கும் அனுஷ்கா தொடர்ந்து சினிமாவில் தான் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.