பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி |

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மார்கழி திங்கள்' . இந்த படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இசை அமைக்கும் பணியில் இளையராஜாவுடன் பாரதிராஜாவும் இணைந்து கொண்டார். இருவரும் சேர்ந்தது 31 வருடங்களுக்கு முன்பு 'நாடோடி தென்றல்' படத்திற்காக பணியாற்றினார்கள். தற்போது 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும்” என்று மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.




