சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை | ‛புஷ்பா 2' ; கூட்ட நெரிசலில் பெண் பலி : நடிகர் அல்லு அர்ஜுன் கைது | 100வது நாளில் 'தி கோட்' | 'புஷ்பா 2' வரவேற்பு : ராஜமவுலியை மிஞ்சினாரா சுகுமார்? | நேத்ரன் மறைவுக்கு பின் தீபா வெளியிட்ட பதிவு | பிக்பாஸ் எவிக்ஷனுக்கு பின் அர்னவின் சீரியல் என்ட்ரி |
கார்த்தியுடன் விருமன் படத்தில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். அதன்பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் என்ற படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. அதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து வரும் அதிதி, அடுத்தபடியாக விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ராம்குமார் இயக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார். இதன்பிறகு சுதா இயக்கும் சூர்யாவின் 43 வது படத்திலும் அதிதி ஷங்கர் நடிப்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விஜய்யின் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நான் ரெடி என்ற பாடலுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காருக்குள் அமர்ந்தபடி செம ஆட்டம் போட்டு இருக்கிறார் அதிதி ஷங்கர். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.