பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
ராகவா நடிக்கும் 'சந்திரமுகி 2', ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்', விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' ஆகிய மூன்று படங்களின் டிரைலர்கள் யு டியூபில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வெளியானது. ஒரே நாளில் இப்படி மூன்று டிரைலர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மூன்று டிரைலர்களில் நேற்று காலை வரை 'இறைவன்' டிரைலர் 9 மில்லியன்களுடன் முன்னணியில் இருந்தது. அதற்கடுத்தபடியாக 'மார்க் ஆண்டனி' டிரைலர் 8 மில்லியன்களுடன் இரண்டாமிடத்திலும், 'சந்திரமுகி 2' டிரைலர் 4 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாமிடத்திலும் இருந்தது.
ஆனால், இன்றைய நிலவரப்படி போட்டி அப்படியே மாறிவிட்டது. 'மார்க் ஆண்டனி' டிரைலர் 20 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்தபடியாக அதில் பாதியளவு பார்வைகளுடன் 10 மில்லியனில் 'இறைவன்' டிரைலர் இரண்டாமிடத்தில் உள்ளது. 'சந்திரமுகி 2' டிரைலர் 5.7 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறது.
'மார்க் ஆண்டனி' தெலுங்கு டிரைலர் 6.7 மில்லியன்களையும், 'சந்திரமுகி 2' டிரைலர் 2.9 மில்லியன்களையும் பெற்றுள்ளது.
டிரைலர்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தாலும் படம் வெளியான பின்பு எந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம்.