ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக அமெரிக்காவில் டெஸ்ட் லுக்கிற்கு சென்றுள்ளார் விஜய். மேலும் அழகிய தமிழ் மகன், பிகில் படங்களுக்கு பிறகு இந்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய் 68வது படத்தின் அறிமுக பாடலை தர லோக்கல் குத்து பாடலாக கம்போஸ் செய்துள்ளாராம் யுவன் சங்கர் ராஜா. அதிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்திருப்பதால் இப்படத்தின் மொத்த பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்று யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.