சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ரஜினியின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான குணச்சித்திர மற்றும் காமெடி நடிகரான ஆர்.எஸ் சிவாஜி நேற்று முன்தினம் காலமானார். தொண்ணூறுகளில் காமெடி நடிகராக நடித்து வந்த இவர் குறிப்பிட்ட காலம் படங்களில் எதுவும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சமீப வருடங்களாக மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற தொடங்கினார். குறிப்பாக கோலமாவு கோகிலா, கார்கி போன்ற படங்களில் இவரது நடிப்பு பாராட்டு பெற்றது.
இந்த நிலையில் விரைவில் வெளியாகவுள்ள சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் ஆர்.எஸ் சிவாஜி. நேற்று இவரது உடல் தகனம் செய்யப்பட்ட அதேநாளில் தான் சந்திரமுகி 2 படத்தின் டிரைலரும் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள ஆர்.எஸ் சிவாஜியின் காட்சிகளை பார்த்துவிட்டு, இந்த படத்தை பார்க்காமலேயே அவர் மறைந்து விட்டாரே என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.




