சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
சின்னத்திரை நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், நாஞ்சில் விஜயன் யாரை திருமணம் செய்கிறார்? எப்போது திருமணம் செய்யப் போகிறார்? என்ற தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் நாஞ்சில் விஜயனின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனின் மனைவியின் பெயர் மரியா. இவர் விஜயனின் நண்பர்கள் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாஞ்சில் விஜயனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.