சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? | எம்ஜிஆர் பற்றி அவதூறு பேச்சு : தெலுங்கு நடிகருக்கு விஷால் கண்டனம் | 8 வார இடைவெளியில் ஓடிடி: தென்னிந்திய தியேட்டர் சங்கம் அதிரடி முடிவு | ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் |

விஜய் டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா?. இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் மிகையல்ல. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தமிழில் சில படங்களிலும் கோபிநாத் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது முதல்முறையாக சீரியலிலும் கோபிநாத் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் கோபிநாத்தின் என்ட்ரி புரோமோவில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் கோபிநாத் கெஸ்ட் ரோலில் வருகிறாரா? அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. எனினும், கோபிநாத்தின் இந்த என்ட்ரி விரைவில் அவர் சீரியலில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்.




