காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கைத் துவக்கினார். தற்போது 20 லட்சம் பாலோயர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, சில பிரபலங்களை மட்டுமே அவரது கணக்கில் பின் தொடர்கிறார்.
அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், மலையாள நடிகைகளான அபர்ணா பாலமுரளி, பார்வதி, தமிழ் நடிகையான சமந்தா, நிஹரிகா, பாலிவுட் நடிகைகளான கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான், இசையமைப்பாளர் அனிருத், பிரபல பெண் யூடியூபர் நிஹரிகா, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளிட்ட 20 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கிய பிறகு 'ஜவான்' படத்தைப் பற்றிய பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'இறைவன்' படத்தின் அப்டேட்டுகளைக் கூடப் பதிவிடவில்லை. சீக்கிரத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள தமிழ் நடிகை என்ற சாதனையை நயன்தாரா பெறவும் வாய்ப்புகள் உண்டு.