ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் சமந்தா தமிழை விட தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இருந்தாலும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'யசோதா, சாகுந்தலம்' ஆகிய இரண்டு படங்களும் தோல்வியைத்தான் தழுவின. மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் நடித்து வந்த 'குஷி' படம் நேற்று பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளிலேயே 30 கோடி வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று படம் வெளியான பின்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது தெரிந்ததும் அமெரிக்காவில் இருக்கும் சமந்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இது ஒரு போதும் எளிதாகக் கிடைக்காது, ஒரு கனவு நனவாகும் சாத்தியம்தான் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறது. குஷிக்கு நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், சில புகைப்படங்களைப் பதிவிட்டு முதல் புகைப்படம், “படம் வெளியான பின்பு எடுத்தது,” 2வது, 3வது புகைப்படங்கள், “வெளியீட்டிற்கு முன்பாக (மன அழுத்தத்துடன்', 4வதாக இருக்கும் வீடியோ, “என்னை உயிருடன் இருக்கும் அதிர்ஷ்டமான பெண்ணாக நீங்கள் உணர வைத்த போது,” என குறிப்பிட்டுள்ளார்.