''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக 'ஜெயிலர்' படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது என்பது பற்றித்தான் சினிமா ரசிகர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படத்திற்காக அவருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். அதோடு படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும் சேர்த்து பேசியதாகவும், அந்த பங்குத் தொகையைத்தான் அதன் தயாரிப்பாளர் ரஜினியை சந்தித்து நேரில் வழங்கியதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். அந்தத் தொகை மட்டுமே 100 கோடி என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
ஆக, மொத்தம் 'ஜெயிலர்' படத்திற்காக மொத்தமாக 220 கோடி ரூபாய் ரஜினிகாந்திற்கு வருமானம் என்கிறார்கள். இதனால், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அவரது ரசிகர்களின் கருத்து. இதற்கு முன்பு கூட ரஜினிகாந்த், தான் நடிக்கும் படங்களின் சம்பளத்துடன் சேர்த்து சில குறிப்பிட்ட ஏரியாக்களின் வினியோக உரிமையையும் பெற்றுள்ளார். அதன் மூலம் கணிசமான தொகை அவருக்குக் லாபமாகக் கிடைத்திருக்கிறது.
மேலும், ரஜினிக்கு வழங்கப்பட்ட காரின் மதிப்பும் சுமார் ஒன்றரை கோடி என்கிறார்கள். இதுவரையிலும் இப்படி ஒரு பரிசை ரஜினி யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் கூடுதல் தகவல்.