ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான தெலுங்குத் திரைப்படம் 'குஷி'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்றைய முதல் நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் 30 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கில் மட்டும் 16 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 52 கோடி வரை வியாபாரம் நடந்துள்ள இப்படத்தின் முதல் நாள் வசூலே 30 கோடி என்பதால் இப்படம் நிச்சயம் லாபகரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சினிமா வரலாற்றில் முதல் நாள் வசூலாக இந்தப் படம்தான் அதிக வசூலித்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.