ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியில் 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நீயா? நானா?. இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் அதனை தொகுத்து வழங்கும் கோபிநாத் என்று சொன்னால் மிகையல்ல. சின்னத்திரை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தமிழில் சில படங்களிலும் கோபிநாத் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது முதல்முறையாக சீரியலிலும் கோபிநாத் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் கோபிநாத்தின் என்ட்ரி புரோமோவில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் கோபிநாத் கெஸ்ட் ரோலில் வருகிறாரா? அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. எனினும், கோபிநாத்தின் இந்த என்ட்ரி விரைவில் அவர் சீரியலில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் பேசி வருகின்றனர்.




