‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. அதைவிட இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கிறார் என்கிற செய்திகளுக்காகவே இன்னும் பிரபலமானவர். கடந்த 2013ல் நடைபெற்ற மிஸ் இந்தியா எர்த் அழகிப்போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வென்ற இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார். அந்த அழகிப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின்.
அப்போது இறுதிச்சுற்றில் சோபிதாவிடம் அசின் கேள்வி கேட்கும்போது, “கல்லூரிகளில் மாணவிகள் இப்படித்தான் உடை அணிந்து வரவேண்டும் என அரசாங்கமோ கல்லூரி நிர்வாகமோ நிர்பந்தப்படுத்தினால் உங்களது பதில் என்னவாக இருக்கும்” என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சோபிதா, “ மாணவிகள் உடை அணியும் விஷயத்தில் கல்லூரி நிர்வாகமும் அரசாங்கமும் தலையிடக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் கலாச்சார காவலர்களாக தங்களை மாற்றிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று பதில் அளித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் திடீரென வைரலாக பரவி வருகிறது.