25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படம் ஹிந்தியை தாண்டி அடுத்தபடியாக தமிழில் மிகுந்த கவனம் செலுத்தி புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அட்லீயையும் தாண்டி இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்திருப்பது தான். கூடவே அனிருத்தும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் ஹிந்தியை தாண்டி ஒரு தமிழ் படமாகவே இது புரமோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய்சேதுபதி பேசும்போது, “நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண்ணை விரும்பினேன். எல்லா பெண்களுக்கும் 96 ஜானு போல இப்படி ஒரு கதை இருக்கும். ஆனால் அந்த பெண் ஷாரூக்கான் மீது மிகப்பெரிய காதலில் இருந்தார். அந்த சமயத்தில் என் காதலுக்கு வில்லனாக இருந்தவர் ஷாரூக்கான் கான். அதற்காக அவரை பழிவாங்க நினைத்திருந்தேன். இந்த ஜவான் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது'' என்று கூறினார்.