நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை அதிகம் தவிர்ப்பவர். அவர் நடிக்கும் படங்களுக்குக் கூட புரமோஷன்களுக்கு வரமாட்டார். நேற்று சென்னையில் நடந்த 'ஜவான்' நிகழ்வில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. கேரளாவில் குடும்பத்தினருடன் ஓணம் கொண்டாடியதால் அவரால் வர முடியவில்லை என்று இயக்குனர் அட்லீ தெரிவித்திருந்தார்.
இதுவரையில் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லாத நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்து அறிமுகமாகியுள்ளார். தனது முதல் பதிவாக தனது இரட்டைக் குழந்தைகளான உயிர், உலக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். 'ஜெயிலர்' படப் பாடலுடன் இடம் பெற்றுள்ள அந்தப் பதிவில், “நான் வந்துட்டேன்னு சொல்லு….' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விரைவில் அதிக பாலோயர்களை நயன்தாரா பெறுவார் என எதிர்பார்க்கலாம்.