நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தெலுங்கு திரையுலகை சேர்ந்த இயக்குநர் ஏ.எஸ்.ரவிக்குமார் என்பவர் தனது படத்தின் கதாநாயகியை பொது மேடையில் முத்தமிட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. பாலகிருஷ்ணா, கோபிசந்த், சாய் தரம் தேஜ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களை இயக்கியவர் ஏ.எஸ் ரவிக்குமார். தற்போது அவரது இயக்கத்தில் திரிகபதாரா சாமி என்கிற படம் உருவாகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடிக்க, கதாநாயகியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கதாநாயகி மன்னரா சோப்ரா பேசி முடித்ததும் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த இயக்குனர் ரவிக்குமார் கதாநாயகிக்கு எதிர்பாராத விதமாக அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதனால் திடீர் அதிர்ச்சிக்கு மன்னரா சோப்ரா ஆளானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சமாளித்தார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பொதுவெளியில், அதுவும் ஒரு நடிகையின் அனுமதியின்றி ஒரு இயக்குனர் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்வது வெட்கக்கேடானது என்று அவருக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.