'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல், தற்போது மீண்டும் விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களாக இயக்கி வருவதாலும் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருவதாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நபராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தையும் இவர் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். அவரது லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதால் இது அடுத்து அவர் இயக்க உள்ள படத்திற்கான கதை விவாதத்திற்காக இங்கே வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் அங்கு இருந்த தகவல் அறிந்து ரசிகர் கூட்டம் ஹோட்டலில் பெரிய அளவில் கூடியது.
அவர் கிளம்பும் தினத்தன்று மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ளவும் லியோ பட அப்டேட் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவும் முண்டியடித்ததால் அங்கிருந்து அவரது காரில் கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினார் லோகேஷ் கனகராஜ். பின்னர் தொடர்ந்து வந்த தனது காருக்கு மாறிக்கொண்டார்.
இதற்கு முன்னதாக முதல் நாளன்று இரவு புதுச்சேரி பீச்சில் வாக்கிங் சென்றார் லோகேஷ் கனகராஜ். அப்போதும் ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டனர். அவருக்கு பாதுகாப்பாக ஐந்து பவுன்சர்கள் வந்திருந்தாலும் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதியிலேயே வாக்கிங்கை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.