தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி | ஓடிடி நிறுவனங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் வைக்கும் செக் | இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி |
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது. ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. இதற்காக காஷ்மீருக்கு ஜப்பான் படக்குழுவினர்கள் சென்றுள்ளனர். இந்த பாடலுக்கு சாண்டி நடனம் அமைக்கிறார். இப்போது பொதுமக்கள் காஷ்மீரில் கார்த்தியை சந்தித்து போட்டோ எடுத்துள்ளனர் .இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.