2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. வெளியான முதல் நாளில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம். அது மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கு புகழ் வெளிச்சமும் பாய்ச்சி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் படம் முழுவதும் ரஜினி உடனேயே பயணிக்கும் விதமாக நடித்திருந்த நடிகர் ஜாபர் சாதிக், விக்ரம் படத்தை தொடர்ந்து இந்த படத்தின் மூலம் இன்னும் அதிக கவனம் பெற்றுள்ளார்.
குறிப்பாக ரஜினியுடன் இணைந்து காமெடி மற்றும் நடன காட்சியில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் பெரும்பாலான காட்சிகளில் தான் அணிந்து நடித்த கூலிங் கிளாஸை ஜாபருக்கு பரிசாக வழங்கியுள்ளார். குறிப்பாக இந்த படத்தில் பல காட்சிகளில் ரஜினிகாந்த் தனது ஆட்களுக்கு சிக்னல் கொடுக்கும் ஒரு ஆயுதமாக இந்த கூலிங் கிளாஸை பயன்படுத்தியிருந்தார். படத்தில் இந்த கூலிங் கிளாஸ் மட்டும் தனியே காட்டப்படும் காட்சிகளில் கூட ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கைதட்டி ரசித்தனர். இந்த நிலையில் அப்படி ஒரு கூலிங் கிளாஸ் தனக்கு ரஜினிகாந்த்திடம் இருந்து பரிசாக கிடைத்த தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ஜாபர் சாதிக்.