நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். தொடர்ந்து புதுதுது சீரியல்களை களமிறக்கி வரும் நிலையில் அடுத்ததாக ‛இதயம்' என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதுதொடர்பாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், நாயகியின் காதல் கணவன் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைய இன்னொரு நபர் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டு உயிருக்கு போராட தனது கணவனின் இதயம் இந்த உலகத்தில் தொடர்ந்து துடிக்கட்டும் என்று தானம் செய்கிறாள் நாயகி.
உண்மை காதலுக்கு என்றும் அழிவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இதய மாற்று அறுவை சிகிச்சையால் உயிர் பிழைக்கும் நபர் நாயகியை பார்க்கும் போதெல்லாம் அவனது இதயத்திற்குள் இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது. அந்த நாயகிக்கும், அவளது குழந்தைக்கும் பாதுகாவலாக இருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் பதைக்கிறது. இப்படியான நிலையில் இவர்களின் வாழ்க்கையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது தான் சீரியலின் கதை என புரொமோவை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், வித்தியாசமான காதல் கதையாகவும் இருப்பதால் இந்த சீரியல் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதயம் சீரியல் வரும் திங்கள் முதல் ( ஆகஸ்ட் 28 ) மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரியலில் நாயகியாக ஜனனி அசோக் குமார் நடிக்க, நாயகனாக ரிச்சர்ட் ஜோஸ் என்பவர் நடிக்கிறார். கடலூரை சேர்ந்த வனிதா என்ற பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்ட காதலனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து தனது காதலனை கரம்பிடித்த விஷயமும் இந்த சீரியல் கதையோடு ஒன்றி போவதாக ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.