ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, தனது தாயின் வழியை பின்பற்றி நடிகையாக மாறிவிட்டார். தமிழில் ஹீரோ படத்தில் நடித்தவர், அடுத்ததாக சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல மலையாளத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் ஜோடியாக 'ஹ்ருதயம்' என்கிற படத்தில் நடிக்கிறார். வினீத் சீனிவாசன் இயக்கிவரும் இந்தப்படத்தில் தனது படப்பிடிப்பை நேற்றுடன் நிறைவு செய்தார் கல்யாணி பிரியதர்ஷன்.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள கல்யாணி, “நான் சினிமாவுக்கு வந்தது மற்ற சிலரை போல அதன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அல்ல.. எனது சிறுவயது விடுமுறை தினங்கள் எல்லாமே என் தந்தையின் படப்பிடிப்பு தளத்தில் தான் கழிந்தன. என் தந்தை படப்பிடிப்பு சமயங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக சந்தோஷமாக இருந்ததை போல, வேறு ஒரு மனிதரை நான் பார்த்தது இல்லை. அப்போதே நானும் எதிர்காலத்தில் இதேபோன்ற ஒரு சந்தோஷ மனுஷியாக வாழவேண்டும் என முடிவுசெய்தே இந்த துறைக்குள் நுழைந்தேன்.. ஹ்ருதயம் படப்பிடிப்பில் நான் கலந்துகொண்ட இந்த இரண்டு மாதங்களும் அப்போது நான் கண்ட அந்த கனவு நனவானதை நிஜமாகவே உணர்ந்தேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் கல்யாணி.