2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
வரலாற்று சிறப்பு மிக்க சாதனையாக இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது. நிலவில் கால் பதித்த 4வது நாடு என்ற பெருமையையும், தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்காக கட்சி, மதம் வேறுபாடுகளை கடந்து அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சாதனை குறித்து ரஜினி தனது டுவிட்டரில் “அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா இந்த மாபெரும் சாதனையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயானை தரையிறக்கியதன் மூலம் நமது தேசம் அதன் பெருமையை அடையாளப்படுத்துகிறது. இஸ்ரோவுக்கு எனது இதயம் கனித்த வாழ்த்துகள். நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “செயற்கைகோளின் பாகங்களை சைக்கிளில் சுமந்து சென்றது தொடங்கி நிலவில் தரையிறங்கியது வரை என்ன ஒரு நெடும் பயணம். இஸ்ரோ குழு இந்தியாவையே பெருமைபடுத்தியுள்ளது. நமது தேசத்தின் விண்வெளிப் பயணத்தில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு வரலாற்று நாள். நிலவில் இந்தியர்கள் நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என பதிவிட்டுள்ளார்.