சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர வாரிசு நடிகர்களாக களம் இறங்கி தங்களது திறமையால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தங்களுக்கென தனித்தனி இடத்தை தக்க வைத்துள்ளவர்கள் மலையாள நடிகர் பஹத் பாசிலும், நடிகர் சாந்தனு பாக்கியராஜும். பஹத் பாசில் நடிகை நஸ்ரியாவையும், சாந்தனு நடிகை மற்றும் டான்சரான கிகி விஜய்யையும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இயக்குனர் விஜய் தனது நட்பு வட்டாரத்துக்காக ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றில் இந்த நட்சத்திர ஜோடிகள் கலந்து கொண்டனர். இரண்டு ஜோடிகளுக்கும் திருமண நாள் ஒன்றே என்பதால் அந்த நிகழ்விலேயே பஹத்-நஸ்ரியா ஜோடி தங்களது ஒன்பதாவது திருமண நாளையும் சாந்தனு-கிகி விஜய் ஜோடி தங்களது எட்டாவது திருமண நாளையும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் சாந்தனு தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.