'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சூது கவ்வும் திரைப்படம் மூலம் கவனிக்கத்தக்க நடிகராக அறிமுகமான அசோக் செல்வன், இப்போது தமிழ் சினிமாவில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான போர் தொழில் படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் அசோக் செல்வன் மார்க்கெட் இன்னும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்கிற படத்தில் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இவர்களது திருமண பத்திரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் லீக் ஆகி உள்ளது.
இதன்படி இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருநெல்வேலி இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை என்கிற இடத்தில் காலை 6 முதல் 7 மணிக்குள் நடைபெற இருப்பதாக அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அநேகமாக செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்த இவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.