பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது தெலுங்கில் 'குஷி' படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படம் செப்டம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின் தற்போது அமெரிக்கா சென்றுள்ளார் சமந்தா.
அங்கு நியூயார்க் நகரத்தில் நடைபெறும் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார். நியூயார்க் நகரத்தின் நினைவுகளாக சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கனவுகள் உருவாகும் இடம் நியூயார்க் என்று சொல்வார்கள். இங்கு எனது முதல் படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று எனது வாழ்க்கை ஆரம்பமானது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பயந்திருந்த ஒரு சிறு பெண் அதை எப்படி சாதித்தார். ஆனாலும், பெரிய கனவைக் காணும் அளவுக்கு தைரியமானவள்… 14 வருடங்களுக்குப் பிறகு இன்று…,” எனப் பதிவிட்டுள்ளார்.
சமந்தா தெலுங்கில் அறிமுகமான படமான 'ஏ மாய சேசவே' அங்கு பெரும் வெற்றியைப் பெற்றது. அன்று முதல் இன்று வரையிலும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் சமந்தா.