த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'டாடா'. இந்த படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு அடுத்து தயாரிப்பாளராகி தனது உதவியாளரின் 'ரேவன்' என்ற படத்தை தயாரிக்கிறார். அவருடன் அவரது நண்பர் எம்.ஜி.ஸ்டூடியோ மாறன் இணைந்து தயாரிக்கிறார். படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதி உள்ளார். கல்யாண் கே.ஜெகன் இயக்குகிறார். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்கிறார், மனு ரபீசன் இசை அமைக்கிறார்.
அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், நடிகர் நேத்திரன் மகள் அஞ்சனா நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் கே பாக்யராஜ், விடிவி கணேஷ், வீரா, இந்துமதி, பா.அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒரே கட்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளது.