நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மண் குமார், வெங்கடேஷ் தயாரிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை விஷ்ணு விஷால் நடித்த 'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். ஆர்யா, கவுதம் கார்த்திக்குடன் மஞ்சு வாரியர் நடிக்கிறார். அசுரன், துணிவு படங்களுக்கு பிறகு அவர் நடிக்கும் தமிழ் படம் இது.
படத்திற்கு திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார். தன்வீர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் மஞ்சு வாரியர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.
இவர்களுடன் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நடத்தி அடுத்த ஆண்டின் துவக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.