காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
வசந்தபாலனின் உதவியாளர் ரமேஷ் பழனிவேல் இயக்கி உள்ள படம் 'டீமன்'. இந்த படத்தில் தேனி, ஜெயில் படங்களில் நடித்த அபர்ணதி ஹீரோயினாக நடித்துள்ளார். சச்சின் என்ற புதுமுகம் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் கும்கி அஸ்வின், ஸ்ருதி பெரியசாமி, ரவீனா தாஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.சோமசுந்தரம் தயாரிக்கிறார், ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரோனி ரபேல் இசை அமைத்துள்ளார். படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளிவருகிறது.
படம்குறித்து இயக்குனர் ரமேஷ் பழனிவேல் கூறும்போது, "அங்காடி தெரு படம் முதல் ஜெயில் படம் வரை வசந்தபாலன் சாரிடம் உதவியாளராக பணியாற்றினேன். சொந்தமாக படம் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஒரு பெரிய அரசியல் படம் தயாரிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் அது பெரிய பட்ஜெட் படம் என்பதால் யாரும் தயாரிக்க முன்வரவில்லை. அதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாக்க கூடிய வகையில் இந்த படத்திற்கு திரைக்கதையை எழுதினேன். டீமன் என்றால் பேய் என்று பொருள். இந்த படம் பேயும், சைக்காலஜிக் திரில்லரும் கலந்த படம்.
சில வருடங்களுக்கு முன்பு மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மென்டில் 10 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது. ஏன் அந்த தற்கொலைகள் இப்படி நடந்திருக்ககூடாது என்ற கேள்விக்கான பதிலாக இந்த படம் உருவாகி உள்ளது. என்றார்.