காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் மற்றும் அல்முரியாத் சார்பில் 'அட்டு' திரைப்பட இயக்குநர் ரத்தன் லிங்கா மற்றும் ராஜ்குமார் வேலுசாமி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை மன்னவராஜன் இயக்குகிறார். அர்ஜூன் என்ற புதுமுகத்துடன் 'செம்பி ' படத்தில் நடித்த முல்லை நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. படம் குறித்து இயக்குனர் மன்னவராஜன் கூறும்போது "தமிழக வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட ஒரு மருத்துவ இனம் குறித்த படமாக இது தயாராகிறது. விருதுகளை குவிக்கும் நோக்கத்தில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு சமூக வரலாற்றை இந்த படம் பேசப்போகிறது" என்றார்.