தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் | ரவுடி சோடா பாபுவாக மாறிய அல்போன்ஸ் புத்திரன் | கமலை தொடர்ந்து நான்கு வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன் | எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் 400 கோடி, 450 கோடி வசூலை நெருங்கி விட்டதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஜெயிலர் பட நிறுவனம், இன்று சமூக வலைதளத்தில் ஜெயிலர் படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், கடந்த ஒரு வாரத்தில் ஜெயிலர் படம் 375. 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்போது வரை ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து கொண்டிருப்பதால், கூடிய சீக்கிரமே இப்படம் 500 கோடி வசூலை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.