மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் | தினமும் அதிகாலை 3 மணிக்கு திரிஷ்யம் கிளைமாக்ஸை எழுதினேன் : ஜீத்து ஜோசப் | நரேன் கார்த்திகேயன் பற்றிய பயோபிக் சினிமாவாகிறது | 'பராசக்தி' வெளியீடு தள்ளிப் போகவே வாய்ப்பு ? | ஹாலிவுட்டில் நடித்த முதல் இந்திய நடிகரின் வாழ்க்கை சினிமா ஆகிறது | தெலுங்கு காமெடி நடிகர் பிஷ் வெங்கட் காலமானார் | ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் 'சோழநாட்டான்' | ஜோஷி, உன்னி முகுந்தன் இணையும் புதிய படம் அறிவிப்பு |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் சலார். பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிகர் பிரித்விராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகத்திற்காக விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பை சமீபத்தில் நடத்தினார் இயக்குனர் பிரசாந்த் நீல்.
மங்களூரில் நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலே தான் காந்தாரா இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை அடுத்து சலார் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் விசிட் அடித்த ரிஷப் ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீலை சந்தித்து சில மணி நேரங்கள் சலார் பற்றியும் தனது அடுத்த படம் பற்றியும் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றார்.