இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் | பிளாஷ்பேக்: பிரவீனாவின் நிறைவேறாத கனவு | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை ஜோடியாக நடித்த படம் | இசை கலைஞர்கள் சினிமாவை மட்டும் நம்பகூடாது : ஏ.ஆர்.ரெஹானா சொல்கிறார் | கூலி படத்தின் சண்டைக்காட்சி லீக் : லோகேஷ் கனகராஜின் வருத்தமான பதிவு | பெப்சி வரம்பு மீறுகிறது: நடிகர் சங்கம் எச்சரிக்கை |
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தை என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அஹமது இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருவதாக சமீபத்தில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருந்தார்கள். ஆனால் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெறுவதில் தாமதமாகி வருவதால், திட்டமிட்டபடி இப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கிறார்கள். தற்போது இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கும் பணிகளில் யுவன் சங்கர் ராஜா தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து பாடல்கள், டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.