மாதவனின் ‛அதிர்ஷ்டசாலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | கதை நாயகனாக மாறும் இயக்குனர் முத்தையா! | ஏ.ஆர். முருகதாஸ் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் வந்த சல்மான் கான் | மூன்று முக்கிய இயக்குனர்களுடன் இணையும் பிரபாஸ்! | பிளாஷ்பேக்: தித்திக்கும் முதல் மூன்று வண்ணத்திரைக் காவியங்களைத் தந்த தமிழ் திரையுலக மூவேந்தர்கள் | தலைத் தீபாவளி கொண்டாடிய வீடியோவை வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்! | அர்ஜுனின் சீதா பயணம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | புதிய டிவி சேனல் தொடங்கும் நடிகர் விஜய்! | அமரன் - மூன்று நாட்களில் 100 கோடி வசூல் | 'ஜமா'வில் ஜமாய்த்த பாரி இளவழகன் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாக்களிலும் அண்ணன், தங்கை பாசப் படங்கள் என்றாலே பெண்களிடமும், குடும்பத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் கவரும். பொதுவாக இந்த சென்டிமென்ட் அவ்வளவு சீக்கிரத்தில் தோற்காது. பல அண்ணன், தங்கை சென்டிமென்ட் படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. அண்ணனாக நடிப்பவர்களும், தங்கையாக நடிப்பவர்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவார்கள்.
ஆனால், ரஜினிகாந்த் நடித்தும் காப்பாற்ற முடியாத அண்ணன், தங்கை சென்டிமென்ட் படமாக 2021 தீபாவளிக்கு வெளிவந்த 'அண்ணாத்த' படம் இருந்தது. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திரக் கூட்டம் இருந்ததால் எப்படியும் படம் ஓடிவிடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அஜித், லட்சுமி மேனன் அண்ணன், தங்கையாக நடித்து 2015ல் தமிழில் வெளிவந்த 'வேதாளம்' படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் நடிக்க 'போலா ஷங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11ல் வெளியிடுகிறார்கள். தமிழில் அஜித், லட்சுமி மேனன் இருவருக்குமே 'வேதாளம்' படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்த படமாக அமைந்தது. அது போல தெலுங்கில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்குப் பெற்றுத் தருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'தங்கை'யாக நடித்து தோல்வியுற்றவர், அந்த ராசியை தெலுங்கில் மாற்றுவாரா என தெலுங்கு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.