'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'லியோ'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையைத் தவிர மற்ற மாநில வெளியீட்டு உரிமைகள், வெளிநாட்டு உரிமைகள், ஓடிடி, சாட்டிலைட் உரிமைகள் வியாபாரம் ஏற்கெனவே முடிவடைந்திருந்தது.
தமிழக வெளியீட்டு உரிமைக்கான பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே வந்தது. தற்போது ஒரு சில ஏரியாக்களின் உரிமை மட்டும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள ஏரியாக்களின் விற்பனைக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளியான 'வாரிசு' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை சுமார் 60 கோடி வரை விற்கப்பட்டது. படத்திற்கான 'ஷேர்' தொகையாக 73 கோடி ரூபாய் வரை கிடைத்தது. அதனுடன் ஒப்பிடும் போது 'லியோ' தமிழக வெளியீட்டு உரிமைக்கான விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். சுமார் 100 கோடி வரை வியாபாரம் நடைபெற வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் முந்தைய பட வியாபார விலையை 'லியோ' முறியடிப்பதோடு வசூலையும் முறியடிக்கும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் எதிர்பார்க்கிறார்களாம்.




