இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கொரோனா பாதிப்பால் ஓடிடி தளங்களுக்கான வரவேற்பு அதிகமானது. லாக் டவுன் போட்ட போது, தியேட்டர்கள் மூடப்பட்டதால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு ஓடிடி தளங்களே என்டர்டெயின்மென்ட் ஆக அமைந்தது. தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களையும் அவர்கள் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். அதன்பின் ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்கள் ஓடிடி தளங்களில் மட்டும் பல பிராந்திய மொழிகளில் வெளியிட ஆரம்பித்தனர்.
அதன் காரணமாக ஒரு மொழியில் வெற்றிகரமாக ஓடிய படங்களை வேறு மொழிகளில் ரீமேக் செய்து மிகவும் குறைந்து போனது. இந்நிலையில் தமிழில் 2015ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'வேதாளம்' படத்தை எட்டு வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் 'போலா சங்கர்' என்ற பெயரில் ரீமேக் செய்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடுகிறார்கள். இந்தக் காலத்தில் இப்படி ஒரு ரீமேக் படத்தில் நடித்ததன் காரணம் என்ன என்பதை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிரஞ்சீவி விளக்கியுள்ளார்.
“ரீமேக்கில் நடிப்பது பற்றி விவாதித்தோம். ஒரு படத்தின் கன்டென்ட் ஸ்ட்ராங் ஆக இருந்தால் ரீமேக்கில் நடிப்பதில் தவறில்லை. 'வேதாளம்' படத்தின் கன்டென்ட்டை தெலுங்கு ரசிகர்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். பல படங்கள் ஓடிடி தளங்களில் உள்ளன. ஆனால், 'வேதாளம்' படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் இல்லை. பல ரசிகர்கள் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. எனவேதான் 'வேதாளம்' ரீமேக்கில் நடித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.