அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் சந்தானம் நடித்து வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன. சமீபத்தில் வெளிவந்த ' டிடி ரிட்டர்ன்ஸ்' மூலம் சந்தானம் ஹீரோவாக கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தன்யா ஹோப், செந்தில், பிரமாணந்தம், தம்பி ராமையா,மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ' கிக்'. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படத்தை பார்டியுன் பிலிம்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே இந்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தை இம்மாதம் (ஆகஸ்ட்) வெளியாகும் என படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஆனால் தேதியை குறிப்பிடவில்லை.