குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சுப்பிரமணியபுரம். 15 வருடங்களுக்கு முன்பு இப்படம் வெளிவந்த போது புதுமுக இயக்குனர், புதுமுக கதாநாயகன் என அதற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ஆனால் படம் வெளிவந்த பின்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சிகள் நடைபெறுவது போல 'சுப்ரமணியபுரம்' படத்திற்கும் நாளை காலை 8 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெற உள்ளது. இப்படி ஒரு சிறப்புக் காட்சி நடைபெறுவதற்கு, படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமுத்திரக்கனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“படம் வெளிவந்த போது எங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. காலை காட்சியாக படத்தைப் பார்க்க வேண்டும் என நினைத்த எங்களுக்கு அப்போது ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் 15 வருடங்களுக்குப் பிறகு நாளை படம் மறுபடியும் வெளியாகும் போது காலை 8 மணி காட்சிக்கு படத்தைத் திரையிடுவது மகிழ்ச்சியை தந்துள்ளது. அப்படி ஒரு மரியாதையை 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்ததே இதற்குக் காரணம்,” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நாளை காலை சென்னை, கமலா தியேட்டரில் நடைபெறவுள்ள சிறப்பு காட்சிக்கு படக் குழுவினர் கலந்து கொள்ள உள்ளார்கள்.